கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி - BMS

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 24, 2025

கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி

உத்திரமேரூரில் இருந்து கீழரோடு வழியே காஞ்சிபுரம் செல்லும் பாதையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, பல்லவ மன்னனால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான ஆலயம். கல்லால மரத்தடியில், சிம்மத்தின் மீது திருப்பாதம் வைத்தபடி, மற்றொரு பாதத்தை முயலகன் மீது வைத்துக் கொண்டு, சிரசில் ருத்திராட்சம் துலங்கக் காட்சி தரும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும்; தேறாத மாணவர்கள்கூட, அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெறுவார்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள். சிம்ம ராசியில் பிறந்தவர்கள், தொடர்ந்து 18 வாரங்கள் இங்கு வந்து நெய்விளக்கேற்றி, ஸ்ரீசிம்ம தட்சிணா மூர்த்தியை வணங்கி வழிபட்டால், சிக்கல்கள் யாவும் தீரும்; ராஜ யோகம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் வழிபட்ட தலம்; எனவே இங்கு ஸ்ரீசோழீஸ்வரர், ஸ்ரீபாண்டியரேஸ்வரர், ஸ்ரீசேரலேஸ்வரர் எனும் திருநாமங்களில் லிங்கமூர்த்தங்களைத் தரிசிக்கலாம். தவிர, வியாக்ரபாதருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. ஆதிகுருவாம் ஸ்ரீசிம்ம தட்சணாமூர்த்தியையும், வியாக்ரபாத முனிவரையும் வணங்குங்கள்; கல்வி- கேள்வியில் வளம் பெறுவீர்கள்!

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here